குளிர்ந்த நீரில் குளித்தால் உடலுக்கு பல விதமான நன்மைகள் இருக்கிறது, இது தொடர்பாக இண்டர்நேஷனல் ஜர்னல் ஆப் சர்க்கம்போலர் ஹெல்த் பத்திரிகையில் 104 ஆய்வுகளின் பகுப்பாய்வுகளை வெளியிட்டுள்ளது.
குளிர்ந்த நீரில் குளித்தாலோ, நீச்சல் அடித்தாலோ சரும திசுக்களில் ரத்தம் ஆழமாக வேரூன்றி செல்வதால் ரத்த ஓட்டம் மேம்படுகிறது.
கடினமான வேலைகளை செய்த பிறகு உடல் அதிகமாகச் சோர்வடையும் பிறகு உடலில் வலி ஏற்படும், அச்சமயம் குளிர்ந்த நீரில் நிறாடுவதால், தசைகளை தளர்வடைய செய்து சோர்வைப் போக்கும் மற்றும் உடல் வலியை குறைக்கும் .
நீச்சல் வீரர்களுக்கு இதய கோளாறுகள் வருவது குறைவு, இது சம்மந்தமாக நடந்த ஆய்வில் குளிர்காலத்தில் நீச்சல் செய்த வீரர்களில் இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகமாகவும், நீச்சல் வீரராக இல்லாதவர்களுக்கு இன்சுலின் சரிவும் ஏற்பட்டுள்ளது . இதனால் நீச்சல் வீரர்களுக்கு சக்கரை நோய் வரும் அபாயம் குறைவு .
உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வது , இதய நோய், நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் என பல கொடிய நோய்களுக்கு வழிவகுக்கிறது. எனவே உடலின் கேட்ட கொழுப்புகளை குறைக்க சிரமப்படுவோர் , தினமும் குளிர்ந்த நீரில் நீராடினால் அல்லது நீச்சல் அடித்தால் உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.