ஸ்ரேயாஸ் ஐயர் அபாரம் – இலங்கைக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி

403
Advertisement

இலங்கை அணியுடன் விளையாடிய மூன்றாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது .இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளது . கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்று இருந்தது இந்தநிலையில், மூன்றவது போட்டி இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது .இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்துவெளியேறினர் . கேப்டன் சனகா மட்டும் அதிரடியாக ஆடி 78 ரன்கள் எடுத்தார் . இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், ரோஹித் சர்மா களமிறக்கப்பட்டனர் . ரோஹித் 5 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 18 ரன்களிலும் வெளியேற ,அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி,45 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 16.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்திய அணி 3 போட்டிகள் தொடரில் மூன்றிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.