வாய் துர்நாற்றத்தை நீக்கும் வாழைப்பூ 

267
Advertisement

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளதாகவே உள்ளன, இதில் வாழைப்பூ பல விதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது, இதனை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. 

முக்கியமாக இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து  வெளியேற்றி விடும் , எனவே இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து ரத்து ஓட்டம் சீராகும், இதில் இருக்கும் துவர்ப்புத்தன்மை இரத்தத்தின் சர்க்கரைப்பொருளை கரைத்து வெளியேற்றும், இதனால்  இரத்தத்தின் சக்கரை அளவு சமநிலையில்  இருக்கும்.

செரிமான தன்மையை அதிகரிக்கும். வயிற்றுப்புண்களை ஆற்றும் வல்லமை உண்டு. மூலநோய்களைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும். சீதபேதியைக் கட்டுப்படுத்தும். வாய்ப்புண்ணை நீக்கி துர்நாற்றத்தை நீக்கும்.