தேஜஸ் ரயிலுடன் தோனியை ஒப்பிட்ட தெற்கு ரயில்வே

254
Advertisement

தல தோனி உலகின் மிகச்சிறந்த ஃபினிஷர் என்பதும் பல இக்கட்டான போட்டிகளில் இந்திய அணிக்கும் சரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சரி கடைசி நேரத்தில் எந்தவித பதட்டமும் இன்றி அதிரடியாக விளையாடி வெற்றியை தேடித் தந்து உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் , பதட்டப்படாமல் முதல் பந்தில் சிக்ஸர், இரண்டாவது பந்தில் பவுண்டரி, மூன்றாவது 2 ரன்கள் மற்றும் கடைசி பந்தில் ஒரு பவுண்டரி என 16 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடி தந்ததோடு, மீண்டும் தான் ஒரு மிகச்சிறந்த ஃபினிஷர் என்று தல தோனி நிரூபித்துள்ளார்.

வழக்கம் போல தல தோனி கிரிக்கெட் ரசிகர்களுக்கு திரில் வெற்றியை பரிசளித்தார்.தோனியை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில்,  தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் எங்கள் தேஜஸ் ரயிலை காட்டிலும் தோனியின் வேகம் அதிகம் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவாக ஓடும் தேஜஸ் ரயில் சென்னையிலிருந்து மதுரைக்கு 6 மணி நேரத்திற்கு செல்லும். ஆனால் அதை விட தோனியின் வேகம் அதிகம் என்று கூறிவிட்டு உள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது