டெல்லியில் இருந்து லண்டனுக்கு வரும் செப்டம்பர் மாதத்தில் 18 நாடுகள் வழியாக பேருந்து சேவை தொடங்கப்படவுள்ளது.
இந்த பேருந்தில் லண்டன் செல்ல 15 லட்சம் செலவாகும் என தெரியவந்துள்ளது.
டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து சேவை தொடங்க இரு ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.
ஆனால், கொரோனா தாக்கத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது, கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் இந்த செப்டம்பர் மாதத்தில் முதன் முதலக டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
Adventures Overland டிராவல்ஸ் நிறுவனம் சார்பில் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த சேவை தொடங்கப்படவிருந்தது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக திட்டம் கைவிடப்பட்டது.
அப்போது, அறிவிப்பு வெளியானவுடனே 40,000 பேர் பதிவு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
70 நாட்களில் 18 நாடுகள் வழியாக 20,000 கிலோ மீட்டர் கடந்து இந்த பஸ் லண்டனை சென்றடையும்.
பல நாடுகளின் விசா நடைமுறை, பேருந்து டிக்கெட், தங்குமிடம், உணவு உள்ளிட்டவை அடங்கும்.
பேருந்தில் மொத்தமே 20 படுக்கைகள் மட்டுத்தான் இருக்கும். பேருந்திலேயே உணவு உண்ணவும் வசதி உண்டு.
இதற்கெல்லாம் கட்டணமாக 15 லட்சம் வசூலிக்கப்படும்.
மியான்மர், தாய்லாந்து, சீனா, கஜகஸ்தான், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக லண்டனை சென்றடையும்.
நீர் நிலைகளை கடத்த சில இடங்களில் பெரிய படகுகள் பயன்படுத்தப்படுமாம்.
கடந்த 1957 ஆம் ஆண்டே கொல்கத்தாவில் இருந்து லண்டனுக்கு டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளில் எல்லைப்பகுதியில் நிலவிய பிரச்னைகளாலும் சில விபத்துகள் காரணமாக சேவை நிறுத்தப்பட்டது.