ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி கர்நாடக நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

178
Advertisement

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்கள் கர்நாடக அரசால் பறிமுதல் செய்யப்பட்டது.

தற்போது அந்த பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி தகவல் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 5-ந் தேதி  நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஜெயலலிதாவின் வாரிசு ஜெ.தீபா என்று கூறி அவரது சொத்துக்களை தமிழ்நாடு நீதிமன்றம் ஜெ.தீபாவிடம் ஒப்படைத்து தீர்ப்பு கூறியுள்ளது. அதனால் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் பொருட்களை ஜெ.தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரினார். இதைதொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.