ஜவ்வரிசியின் அறியப்படாத உண்மைகள்

328
Advertisement

இந்திய நாடு தானிய மற்றும் அரிசி வகைகளில் பல விதத்தைக் கொண்டுள்ளது, ஆனால் இந்தியாவில் மிகப் பரவலாகப் பயன்படுத்தி வரும் ஜவ்வரிசு மரவள்ளி கிழங்கில் இருந்து பெறப்பட்டது, ஜவ்வரிசியின் சுவாரஸ்ய தகவல்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

ஜவ்வரிசியின் ஆங்கிலப் பெயர்  Whole Sago, இது மெட்ரோசைலான் ஸாகு, என்ற ஒருவகை பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சி, இறுதியில் கிடக்கும் மாவு போன்ற பொருளைச் சிறு சிறு குருணைகளைப் போல் உருட்டித் தயாரிக்கப்படுகிறது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால், ஜாவா அரிசி என அழைக்கப்பட்டு அதுவே பின்னர் ஜவ்வரிசி என்ற பெயர் மாறியது.

இந்தோனேசியப் பனைமரத்து ஜவ்வரிசிக்கு மாற்றாக உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கைக் கொண்டு செய்யப்பட்டதாகும்.

மரவள்ளிக்கிழங்கு மாவைத் தொட்டிலில் இட்டு அதைக் குலுக்கி குருணையாகத் திரட்டி, பாத்திரத்தில் இட்டு வறுத்து அதை ஜவ்வரிசிப்போல மாறச் செய்து போலி ஜவ்வரிசியைக் கண்டுபிடித்தனர்.

மரவள்ளிக்கிழங்கு ஜவ்வரிசியையும் sago என்ற பெயரில் விற்பனை செய்ய அரசு அனுமதி தர, போலியே அசலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.