கிட்னி தானம் செய்தவருக்கு பில் குடுத்த மருத்துவமனை!

401
Advertisement

மனித உடலானது பல ஆச்சரியங்களை கொண்டது.

இதில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் மிகவும் முக்கியமானவை.

இவற்றில் ஒன்று செயலிழந்தால் கூட பெரிய அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இப்படி யாருக்காவது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டால் மற்றவர்களிடம் இருந்து அந்த உறுப்பை தானாக பெற்று கொள்வார்கள்.

பெரும்பாலும் இறந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானம் பெறுவது வழக்கம்.

அதே போன்று கிட்னி போன்ற உறுப்புகளை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் இருந்தாலும் தானம் செய்வார்கள்.

இது பொதுவாக மனித நேயத்தின் அடிப்படையில் செய்ய கூடிய ஒன்றாகும்.

ஆனால், இது போன்று உறுப்புகளை தானம் செய்தவருக்கு பில் கொடுத்து பணம் கேட்டால் எப்படி இருக்கும்? என்று நீங்களே யோசித்து பாருங்கள்.

இப்படி ஒரு மோசமான நிகழ்வு தான் எலியட் மலின் என்பவருக்கு நடந்துள்ளது.

சிறுநீரக செயலிழப்பின் கடைசி கட்டத்தில் இருந்த தனது உறவினரான ஸ்காட் க்லைனின் தாயார் எலியட்டை தொடர்பு கொண்டுள்ளார்.

தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கும் நபரை தேட சொல்லி க்லைனின் தாயார் எலியட்டிடம் கூறியுள்ளார்.

இந்த உறவினர்கள் இருவரும் ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் என்றாலும், அவர்கள் ஒருவரையொருவர் உறவினர்களாகவே கருதி இருந்தார்கள்.

க்ளைனின் தாயார் ஒரு நன்கொடையாளரை கண்டறிய பலரைத் தொடர்பு கொண்டார்.

ஆனால், யாரும் அவருக்கு கிடைக்கவில்லை.

வேறு வழியின்றி எலியட் தனது ஒரு கிட்னியை தானமாக தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னதாக “ஸ்காட்டுக்கு சிறுநீரகம் தேவை” என்ற தலைப்பில் க்லைனின் தாயார் மாலினுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, “என்னிடம் உதவி கேட்டதற்கு நன்றி.

ஆனால் இதற்காக நீங்கள் எந்த அழுத்தத்தையும் எடுத்து கொள்ள வேண்டாம்.

மன்னிக்கவும், நான் உங்களின் சுமையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

கடத்த ஜூலை மாதத்தில் டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள பேய்லர் ஸ்காட் & ஒயிட் ஆல் செயின்ட்ஸ் மருத்துவ மையத்தில் திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு எலியட்டிற்கு மருத்துவமனை சார்பாக ஒரு நீண்ட பில் ஒன்று அனுப்பப்பட்டது.

பொதுவாக தங்கள் உறுப்புகளைக் தானமாக கொடுப்பவர்களுக்கு மருத்துவக் கட்டணங்கள் எதுவும் அனுப்பப்படக் கூடாது.

மருத்துவச் செலவுகள் பொதுவாக நோயாளியின் காப்பீட்டால் ஈடுசெய்யப்படுகின்றன.

துரதிர்ஷ்டவசமாக, எலியட்டிற்கு மருத்துவமனையிடன் இருந்து பில் வந்தது.

பில்லிங் செய்யும் போது ஏற்பட்ட தவறின் காரணமாக 13,064 டாலர் மெடிக்கல் பில் எலியட்டிற்கு அனுப்பப்பட்டது.

இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், நார்த்ஸ்டார், மயக்க மருந்து வழங்கும் நிறுவனம், பில் செலுத்தப்படாவிட்டால் அதனை வசூலிக்க வரவுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளது.

இறுதியாக மருத்துவமனையின் தரப்பில் உள்ள தவறை உணர்ந்து, நார்த்ஸ்டாரின் CFO எலியட்டிற்கு மன்னிப்புக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அதில், “நார்த்ஸ்டார் சார்பாக, இந்த விஷயத்தில் உங்களுக்கு ஏதேனும் குழப்பம் அல்லது கவலையை ஏற்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,

மேலும் இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்பட்ட்டுவிடும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

எங்கள் நோயாளிக்கு இந்த பாதிப்பை குணப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

பில்லிங் தவறுகள் மிக அரிதானது. இது போன்று நடந்ததற்கு மன்னிக்கவும்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.