கழிப்பறையை விட அதிக பாக்டீரியாக்கள் இருக்கும் செல்போன்

218
Advertisement

தினசரி வாழ்க்கையில் மிக முக்கிய அங்கமாக செல்போன் மாறிவிட்டது, மனிதனின் மூன்றாம் கையாக இருக்கும் செல்போன் மட்டும் இருந்தால் போதும் எல்லாவற்றையும் செய்ய முடியும், என்ற எண்ணம் இருக்கிறது, ஆனால் போனில் கழிப்பறையை விட அதிக பாக்டீரியாக்கள் இருக்கிறது, என்று சொன்னால் உங்களது ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? அமெரிக்காவின் பிரபல அரிஸோனா பல்கலைக்கழகம் நடத்தி ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. 

எனவே கழிப்பறையை விட 10% அதிக பாக்டீரியாக்கள் ,அதாவது மொத்தமாக 17 ஆயிரம் பாக்டீரியாகள் செல் போனில் இருப்பதாக உறுதியாகியுள்ளது, கொரோனா காலத்தில் கை, கால்கள், காய்கறிகளை நங்கு சுத்தம் செய்து வந்தோம் ஆனால், தற்போது நோய்த் தொற்று அபாயம் குறைந்ததால், அப்பழக்கத்தை ஆப்படியே காற்றில் விட்டுவிட்டோம் , எனவே கழிப்பறைக்குள் செல் போனை எடுத்துச் செல்வதால் மட்டுமே பாக்டீரியாக்கள் பரவுகிறது, இதனைத் தடுக்க செல்போனை கட்டாயம் கழிப்பறையில் பயன்படுத்தக் கூடாது. மேலும் கை மற்றும் செல் போனை சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்யும் பழக்கத்தை தொடர வேண்டும்.