திண்டுக்கல் அருகே மூதாட்டியை கடுமையாக தாக்கி, அவரது 2 கைகளை உடைத்த நபர்கள் மீது, ஆயக்குடி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பழனி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகாயி என்ற மூதாட்டி, அப்பகுதியில் உள்ள கரிசல் குளத்தில் தண்ணீர், வற்றிய காலங்களில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ராமன், பெரியசாமி, தங்காயி ஆகியோர், கரிசல் குளத்தில் தாங்கள் விவசாயம் செய்யப்போவதாக கூறி மூதாட்டியை தாக்கியுள்ளனர். மேலும், மூதாட்டியின் 2 கைகளையும் உடைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டிக்கு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆயக்குடி காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் தாக்கியவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது