இளநரையை சீக்கிரம் குணப்படுத்தும் வீட்டு மருத்துவம்

257
Advertisement

பல இளைஞர்களுக்கு தற்போது மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது இளநரை தான், எனவே இளநரையை சீக்கிரம் குணப்படுத்தும் வீட்டு மருத்துவத்தை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் கடுக்காய் ஊறிய தண்ணீரைச் சேர்த்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்க வேண்டும்.

கறிவேப்பிலை பொன்னாங்கண்ணி கீரை வெந்தயப் பொடி, இஞ்சி, தேன் ஆகியவற்றைத் தினமும் ஒவ்வொன்றாக உணவில் சேர்த்து வரலாம்.

நெல்லிக்காயில் உள்ள வைடமின் – சி தலைமுடியின் வேர்களை வலுப்படுத்துகிறது, இதனால் நெல்லிக்காயை வெட்டி வெய்யிலில் நன்றாக காயவைத்து, பின்னர் எண்ணெய்யில் அதனைச் சூடாக்கி, பின்னர் ஒரு நாள் கழித்து தலையில் போட்டு நான்றாக மசாஜ் செய்தால் வெள்ளை முடி மறைந்து விடும், இதனை வாரம் மூன்று நாட்கள் செய்யலாம். மருதாணி இலையுடன் அவுரி இலை பொடி சேர்த்து அரைத்து தலையில் தடவி வந்தால் தலை முடி நன்கு கருமையாக மாறும். எனவே இவற்றைத் தொடர்ந்து செய்தால் மட்டுமே பலன்கள் கிடைக்கும்.