கொழுந்து விட்டு எறிந்த வீடு உயிரைக் காப்பாற்றிய அலெக்சா

369
Advertisement

வளர்ந்து வரும் தொழில்நுட்ப கருவிகள் மனிதர்களின் உயிரை அபாயத்திலிருந்து காப்பாற்றுவது அதிகரித்து வருகிறது, அந்த வகையில் 6 நபர்கள் இருக்கும் குடும்பத்தினரை தீ விபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள், இரவில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் , திடீரென வீடு முழுவதும் தீ பிடிக்க ஆரம்பித்தது, குடும்ப நபர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் வீடு தீ பிடித்து எரிவதை யாரும் கவனிக்கவில்லை, ஆனால் உடனடியாக வீடு  முழுவதும் அதிகம் தீ பிடித்து புகை மண்டலமாக மாறியது.

இந்த இடத்தில் தான் தொழில்நுட்ப கருவியான அமேசான் தனது வேலையைக் காட்டியுள்ளது, தீ பிடித்ததால் ஏற்பட்ட புகையை அலெக்சா உடனடியாக எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தியுள்ளது இதனால் வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து பற்றி எரியும் தீ பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வீட்டின் கராஜ் வழியாக அனைவரும் வெளியேறித் தப்பித்தனர், இன்னும் சிறிது தாமதமாகி இருந்தால் வீடு முழுவதும் புகை சூழ்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கும். அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது, இவ்விவரங்களை, அந்த நகரத்தின் தீ அனைப்புதுறை வெளியிட்டுள்ளது.

சுமார் 1,75,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வீடு இதில் சேதமடைந்ததாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. உயிரைக் காப்பாற்றிய அலெக்சாவுக்கு பாராட்டுகள் வெகுவாக குவிந்து வருகிறது.