வாட்டி வதைத்து வரும் வெயிலில் வெளியே சென்று வந்தால் முகம் முழுவதும் கருமையாக மாறியது போன்று காட்சி அளிக்கும்.
வெயில் கால கருமையை நீக்கி முகத்தை பொலிவாக்க, சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் போதும். தக்காளியை கூழாக அரைத்து face pack போல போட்டு, உலர்ந்தவுடன் கழுவி விடலாம்.
கற்றாழை ஜெல் மூன்று ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் இரண்டு ஸ்பூன் அளவு கலந்து வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் சிறப்பான பலன்களை எதிர்ப்பார்க்கலாம். ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை பாலில் கலந்து பேஸ்ட் போல செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து கழுவினால் நல்ல மாற்றங்களை காண முடியும்.
எலுமிச்சை சாறுடன் சக்கரை சேர்த்து கருமையான இடங்களில் தடவி பிறகு கழுவி வருவது, கருமையை போக்க உதவும். தயிர் மற்றும் மஞ்சள் face packஉம் கருமை உணர்வை போக்க உதவுகிறது. அனைத்து விதமான facepack போடுவதற்கு முன்பும் சோப்பு அல்லது facewash உபயோகித்து முகத்தை சுத்தமாக கழுவிவிட்டு, pack போட வேண்டும்.
Facepack காய்ந்த பிறகு வெறும் தண்ணீரால் மட்டுமே கழுவுவது சிறப்பான. காலை நேரங்களில் வெயிலால் ஏற்படும் கருமை நிறத்தை போக்க, இரவில் இது போன்ற facepackகள் போட்டு, கழுவியபின் உறங்கினால் அடுத்த நாள் காலையில் முகம் கூடுதல் பொலிவுடன் காணப்படுவதை உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.