டைட்டானிக் கப்பலின் உணவு வகைகளின் மெனுகார்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

255
Advertisement

1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்கிய டைட்டானிக் கப்பல், பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை மையப்படுத்தி, ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படத்தை இயக்கியிருந்தார். இந்தப்படம் மொத்தம் 11 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது. இந்நிலையில், டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான அன்றிரவு பயணிகளுக்குப் பரிமாறப்பட்ட உணவு வகைகளின் மெனுகார்டு இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், முதல் வகுப்பு பயணிகளுக்கு மட்டன் சாப்ஸ், சிக்கன், டர்கி ரோஸ்ட், கஸ்டர்ட் புட்டிங், இறால், பலவிதமான சீஸ் உணவு வகைகள் வழங்கப்பட்டுள்ளன.