“டிக்டாக்” – பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்ட இந்த செயலி காலபோக்கில் சமூகத்தை சீரழிக்கும் செயலியாக மாறியதையடுத்து இந்தியாவில் தடைசெய்ப்பட்டது.இந்நிலையில் , அமெரிக்காவில் உள்ள கார் வைத்திருப்பவர்களை அச்சுறுத்தும்விதம் டிக்டாக்கில் சவால் ஒன்று ட்ரேடிங்கில் உள்ளது.
அது என்ன சவால் என்று பார்த்தால், யுஎஸ்பி கார்டைப் பயன்படுத்தி குறிப்பிட்ட வகை கார்களை இளைஞர்கள் திருடவேண்டும். சவாலின் முக்கிய இலக்கு 2010-2021 ஆண்டுகளின் கியா மற்றும் ஹூண்டாய் நிறுவன கார்களை திருடவேண்டும்.
லாஸ் ஏஞ்சல்ஸில், கடந்த ஆண்டில் இந்த கார்களின் திருட்டு கிட்டத்தட்ட 85 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் புளோரிடாவின் சில பகுதிகளில், திருடப்பட்ட கார்களில் மூன்றில் ஒரு பங்கு கியா மற்றும் ஹூண்டாய் கார்கள் உள்ளன.
இதுபோது இளைஞர்கள் காரை திருடும்போது , செய்யும் அனைத்து செயல்களையும் வீடியோ எடுத்து “கியா பாய்ஸ்” என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி TikTok இல் பதிவிடுகின்றனர். இது காலப்போக்கில் ட்ரெண்டாக மாறியுள்ளது, தற்போது இந்த ஹேஷ்டேக் சுமார் 33 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.இவர்கள் 20 முதல் 30 வினாடிகளில் காரின் பூட்டை உடைத்து,திருடிசென்கின்றனர்.