உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 லட்சம் என்று சொல்லப்படுகிறது, இருப்பினும் மக்கள் தொகை குறைவாக உள்ள மேற்கத்திய நாடுகளை விட, மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில் உயிரிழப்பு 5-8 மடங்கு குறைவாகத்தான் பதிவாகியுள்ளது.
இது குறித்து, சுவிட்சர்லாந்து, பிரேசில், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் கூட்டாக சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில், இந்தியர்களின் உணவு பழக்கம் தான் உயிரிழப்புகள் குறைவாக ஏற்படக் காரணம் என்று தெரியவந்தது.
இந்திய உணவில் பெரும்பாலும் இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. மஞ்சள், தேநீர், மற்றும் இட்லி உணவுப் பழக்கத்தினால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. மேலும் மஞ்சளில் உள்ள குர்குமினானது கொரோனா இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது.
அதுபோல, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிவப்பிறைச்சி, பால் பொருட்கள் , காபி மற்றும் ஆல்கஹால் போன்றவற்றின் அதீத பயன்பாடு மேற்கத்திய நாடுகளில் கொரோனாவின் தீவிரத்தை அதிகரித்தது.
ஸ்பிங்கோலிப்பிட்கள், பால்மிடிக் அமிலம் மற்றும் இந்த உணவுகளில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் LPS போன்றவை அதிகம் இருப்பதும், சைட்டோகைன் அதிகரிப்புக்கு காரணமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.