வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

346
Advertisement

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல்.

விவசாயிகள் வாழ்க்கை செழிக்க, புதிய திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறுமா என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

2022 – 2023ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து வேளாண் துறைக்காக தனி பட்ஜெட்டை, வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த வேளாண் பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பு, விவசாயிகளின் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளன.

2வது முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட், விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் குவிண்டாலுக்கு வழங்குவோம் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

கரும்பு உள்ளிட்ட விளை பொருட்களுக்கு உரிய விலை அறிவிக்கப்படுமா என விவசாயிகளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை விவசாயம், பனை மரம் சார்ந்த விவசாய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.