மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி.

157

எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மன்னிப்பு கேட்டால் அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

எம்.பி-க்கள் சஸ்பெண்ட் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மீண்டும் அவைக்கு பதாகைகளை கொண்டு வரமாட்டார்கள் என்று உறுதியளித்தால், அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு சபாநாயகரால் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்தார். மேலும், விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது அலுவலக பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.