வெப்பத்தால் தவிக்கும் மக்கள்

350

குளிர்பிரதேசதமான இமாச்சலபிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் நிலவும் கடும் வெப்பத்தால் அம்மாநில மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மாநிலம் முழுவதும் பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியது.

உனாவில் அதிகபட்சமாக 44.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, மாநில தலைநகரான சிம்லாவில் அதிகபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸ் ஆகவும், நர்கண்டா மற்றும் குஃப்ரியில் முறையே 22.9 டிகிரி செல்சியஸ் மற்றும் 22.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மலைப்பகுதிகளில் லேசான மழையும், உயரமான மலைப் பகுதிகளில் மழையும் பனியும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.