இவ்ளோ தூரத்தில இருந்து டிவி பாத்தா தான் கண்ண காப்பாத்த முடியும்!

89
Advertisement

ஒரு காலத்தில் ஆடம்பரமாக கருதப்பட்ட தொலைக்காட்சி பெட்டி தற்போது சாமானிய மக்கள் வரை பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருளாக மாறியுள்ளது.

டிவிக்கு மிக அருகில் அமர்ந்து பார்ப்பது கண்களை வெகுவாக பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஒவ்வொரு டிவியின் அளவிற்கேற்ப அதை பார்க்கவேண்டிய தூரத்தின் அளவும் வேறுபடும். அதன்படி 34 இன்ச் டிவியை 1.3 மீட்டர், 42 இன்ச் டிவியை 1.6 மீட்டர், 47 இன்ச் டிவியை 1.8 மீட்டர், 50 இன்ச் டிவியை 1.9 மீட்டர் மற்றும் 55 இன்ச் டிவியை 2.1 மீட்டர் இடைவெளி விட்டு அமர்ந்து பார்க்க வேண்டும்.

Advertisement

மேலும், மணிக்கணக்கில் தொடர்ச்சியாக டிவி பார்த்து கொண்டே இருக்காமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஐந்து நிமிட இடைவேளை எடுத்தால் கண்கள் சோர்வடைவதை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.