டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த ஸ்டாலின்: மக்களிடம் குறைகள் கேட்பு….!

288
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2023) காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து நேற்று இரவு திருச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.

முன்னதாக, மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில், இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தைப் பார்வையிட்டார்.

2023-2024ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை, நீர்வளத்துறையின் மூலம் கால்வாய் சீரமைப்பு, ஏரிகள் புனரமைப்பு, அணைக்கட்டுகள் புதுப்பித்தல், மழைநீர் சேகரிப்பு போன்ற எண்ணற்ற திட்டங்கள் உழவர்களையும் உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டு காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 பணிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 5 பணிகளும், திருச்சி மாவட்டத்தில் 15.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 பணிகளும், கரூர் மாவட்டத்தில் 6.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 38 பணிகளும், அரியலூர் மாவட்டத்தில் 3.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 ரூபாய், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 ரூபாய். மதிப்பீட்டில் 39 பணிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 20.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 189 பணிகளும், திருவாரூர் மாவட்டத்தில் 12.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 111 பணிகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 பணிகளும்,

மயிலாடுதுறை மாவட்டத்தில் 8.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 51 பணிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 பணிகளும் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 10.00 கோடி மதிப்பீட்டில் 55 பணிகளும் என மொத்தம் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4773.13 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 691 பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.