குளிர்கால அஜீரணத்தை அகற்றும் ஐந்து உணவுகள்!

38
Advertisement

பொதுவாகவே, குளிர்காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாது. இவற்றை சரி செய்யும்  ஐந்து எளிய உணவு பொருட்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

உடலில் இருக்கும் வாதம் மற்றும் பித்தத்தை சரி செய்ய இரவில் மூன்று பேரீச்சை பழத்தை ஊறவைத்து அவற்றை காலையில் வெதுவெதுப்பான நீருடன் சாப்பிட வேண்டும்.

இதனால் மலச்சிக்கல், முடி உதிர்வு, மூட்டு வலி போன்ற பல உடல் உபாதைகள் சீராகும். இதே போல வெந்தயத்தை இரவில் ஊறவைத்து பகலில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், குளிரினால் ஏற்படும் செரிமான சிக்கல்கள் சரியாகும்.

Advertisement

A, D, E மற்றும் K விட்டமின்கள் நிறைந்த பசு நெய்யை வெதுவெதுப்பான பசும்பாலில் கலந்து குடிப்பதால் நாள்பட்ட மலச்சிக்கல் படிப்படியாக குறையும்.

காலையில் வெறும் வயிற்றில் தினமும் மூன்று நெல்லிக்காய்கள் சாப்பிடுவதால் ஜீரணக் கோளாறுகள் சரியாவதுடன் முடி கொட்டுதல், இளநரை, உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ள உலர்ந்த கருப்பு திராட்சையை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவதால் குளிர்காலத்தில் ஏற்படும் செரிமான இடையூறுகள் சரியாகும் என கூறும் இயற்கை மருத்துவர்கள், இது போன்ற பருவ காலங்களில் எண்ணெயில் பொரித்த கொழுப்பு பதார்த்தங்களை உண்ணுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.