கஜா புயல் பாதிப்பு – நம் சொந்தங்களுக்கு கை கொடுப்போம்

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் உருக்குலைந்த தமிழக டெல்டா மற்றும் உள் மாவட்டங்களுக்கு உதவ, சத்தியம் தொலைக்காட்சி மனித நேய அடிப்படையில் களம் இறங்கியுள்ளது. “நம் சொந்தங்களுக்கு கை கொடுப்போம்” என்ற பெயரில் மனித நேயத்திற்கான ஓர் இயக்கத்தை சத்தியம் தொலைக்காட்சி தொடங்கியுள்ளது. உதவும் நெஞ்சங்களின் பெயர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்…..gaja-cyclone

 

நம் சொந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு 80 G வருமான வரி சான்று வழங்கப்படும்.

நாட்டில் ஏற்படும் மிகப்பெரிய இயற்கை சீற்றங்களில் அவதியுறும் மக்களுக்கு சத்தியம் தொலைக்காட்சி உதவிக்கரம் நீட்டுவதில் முதலிடம் வகிக்கிறது. சாதி, மத பேதமின்றி, பாதிக்கப்படும் மக்களுக்காக நிதி மற்றும் பொருள் உதவி பெற்று உரியவர்களுக்கு வழங்குவதில் சத்தியம் தொலைக்காட்சி எப்போதும் முன்னிலை வகிக்கும்.

அந்த வகையில் இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர்களை அடுத்து, யாவரும் ஒரு தாய் மக்கள் என்ற நோக்கில் சத்தியம் தொலைக்காட்சி சார்பில் “SATHIYAM EVANGEL TRUST” மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு நேரடியாக சென்று உணவு பொட்டலங்கள், துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியது சத்தியம் தொலைக்காட்சியின் உதவிக்குழு. இந்நிலையில் கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பெரு மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

சொல்லல்லா துயரத்தில் இருந்த கேரள மக்களுக்கு உதவும் வகையில் கேரளாவிற்கு உதவுங்கள் என்ற பெயரில் மனித நேயத்திற்கான ஓர் இயக்கத்தை சத்தியம் தொலைக்காட்சி தொடங்கியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள சொந்தங்கள் அளித்த நன்கொடை கேரளாவுக்கு வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் கஜா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாகை மாவட்டம் வேதாரண்யம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகள், புதுக்கோட்டை, திருவாரூர், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் “நம் சொந்தங்களுக்கு கை கொடுப்போம்” என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தயாரானது சத்தியம் தொலைக்காட்சி. குடிநீர், உணவின்றி தவித்து வரும் நம் சொந்தங்களுக்கு உதவ மீண்டும் ஒரு மனித நேய அடிப்படையில் சத்தியம் தொலைக்காட்சி “SATHIYAM EVANGEL TRUST” மூலம் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவ கோரிக்கை விடுத்துள்ளது.