இந்திய தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மைதான ஊழியர் ஒருவரை அவமதிக்கும் விதம் நடந்துகொண்ட செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
மழையின் காரணமாக ஆட்டம் தொடங்குவது சுமார் 50 நிமிடங்கள் தாமதமானது.மழை இடைவேளையின் போது, கெய்க்வாட் தனது பேட் மற்றும் ஹெல்மேட் உடன் மைதானத்தில் நாற்காலியில் உட்காந்துருந்தபோது, மைதான ஊழியர் ஒருவர் அவரிடம் வந்து, அவருக்கு அருகில் அமர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றார்.
இதை கவனித்த கெய்க்வாட்,அந்த ஊழியரின் தோளில் தட்டியபடி ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்.இது கேமராவில் பதிவாகி உள்ளது.இதனை ட்விட்டரில் பகிர்ந்த ரசிகர் ஒருவர்,தன் அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.விரைவாக இந்த வீடியோ இணையத்தில் பரவத்தொடங்கி மற்ற பல ரசிகர்களும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.