மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு பதிலடி தரும் வகையில், 200 வகையான பொருட்களின் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் விதித்து வருகின்றன.
அதற்கு ஆதரவளிக்கும் வகையில், சர்வதேச நிறுவனங்கள் பலவும் தங்களது சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு பதிலடி தரும் வகையில், ரஷ்ய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி, எந்திரங்கள், மின்னணு பொருட்கள், உயர் ரக மரங்கள், வேளாண் பொருட்கள் உள்பட 200 வகையான பொருட்களை மேற்கத்திய நாடுகளுக்கும், பிற நாடுகளுக்கும் இந்தாண்டு இறுதிவரை ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடையால், உலகளவில் உணவு பொருட்களின் விலையில் கடும் தாக்கம் ஏற்படும் என தெரிகிறது.