தங்க நகைகளை அணிவதால் ஏற்படும் அபாயங்கள்…!

312
Advertisement

பெண்களுக்கு அதிக தங்க நகைகளை அணிய வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக ஒருமுறையாவது ஏற்பட்டிருக்கும், அதுபோல தற்போது பல ஆண்களும் தங்கம் அணிய ஆசைப்படுகிறார்கள், ஆனால் சில நபர்களுக்குத் தங்கம் ஒத்துக்கொள்ளாது அவர் யார் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

தங்கம் அணிவதால் சிலருக்கு கழுத்தின் நிறம் கருப்பாக உருமாறும், ஆரம்பக் கட்டத்திலேயே இந்த பிரச்சனையை சரி செய்து விட்டால் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் அதிக நாட்களுக்கு இதனைக் கண்டுக் கொள்ளாமல் இருந்தால் கழுத்து முழுவதும் கருப்பாக மாறிவிடும்.

வயிற்று சம்மந்தமான பிரச்சனை இருப்பவர்கள் தங்கம் அணிவதைத் தவிர்க்க வேண்டும் ஏனென்றால் தங்கத்தின் உலோக சக்தி அப்பிரச்சனையை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது, அதுபோல உடல் பருமனாக இருப்பவர்கள் தொடர்ந்து தங்கம் அணிவதால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

சில சாஸ்திரங்களின் படி உலோகங்கள் கிரகங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது, வெள்ளிப் பொருட்கள் சந்திரனுடனும், தங்கப் பொருட்கள் வியாழனுடனும் தொடர்பைக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. எனவே தங்க மோதிரத்தை இழப்பது அசுபத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.