நைட்ல லைட் போட்டு தூங்குனா இவ்ளோ ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி

168
Advertisement

இரவில் தூங்கும் போது லைட் போட்டு கொண்டு அல்லது off செய்துவிட்டு தூங்குவது தங்கள் விருப்பம் சார்ந்த விஷயமாகவே பெரும்பாலோனோரால் பார்க்கப்படுகிறது. ஆனால், இரவில் லைட் போட்டுகொண்டு தூங்குவதால் ஏற்படும் விபரீத விளைவுகளை Journal of the European Association for the Study of Diabetes என்ற ஆய்வு பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

LAN exposure என அழைக்கப்படும் Light at Night சக்கரை நோய், இன்சுலின் resistance, beta செல் செயல்பாட்டு பாதிப்பு என உடல் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் சூழலுக்கு காரணமாக அமைவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 9 மில்லியன் சக்கரை நோயாளிகள் உள்ள சீனாவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவில், நகரங்களில் அதிக செயற்கை வெளிச்சம் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே 28 சதவீதம் வரை சக்கரை நோய் தாக்கம் அதிகம் இருப்பதாகவும், இதே மக்கள் குறைந்த வெளிச்சத்தில் இருந்திருந்தால் 42 பேரில் ஒருவருக்கு சக்கரை நோய் ஏற்படாமல் தடுத்திருக்கலாம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்று மாசு, ஒலி மாசு போலவே அதிகப்படியான இரவு நேர வெளிச்சமும் உடல்நலனுக்கு கெடுதலாக அமையும் என கூறும் ஆய்வாளர்கள், சீரான ஆரோக்கியத்துக்கு இயற்கை கட்டமைப்பான  Circadian Rythmஇல் போதுமான வெளிச்சமும் இருளும் உடலுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர்.