ரஷ்யாவுக்கும் உக்ரைனிற்கும் போர் ஆரம்பமானதிலிருந்து இரு நாட்டின் சிறப்பம்சங்கள்,வளங்கள்,பாதிப்புகள் தான் கடந்த சில நாட்களாகவே அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து பல்வேறு காரணங்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் இந்த போரின் உண்மையா காரணம் தான் என்ன ,என்பதை பார்ப்போம்.
போர் துவங்கியதிலிருந்து NATO தான் அதற்க்கு காரணம் என்று பேசப்பட்டது.
NATOவின் விரிவாக்கம் The North Atlantic Treaty Organization ,அப்படி என்றால் வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு,
12 நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள்
1949-ல், உலகப் போருக்குப் பின்பு உருவாக்கப்பட்ட, ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு தான் இந்த NATO.
இந்த 12 நாடுகளைத் தவிர ஜெர்மனி, செக் குடியரசு, அல்பேனியா, பெலாரஸ், போலந்து உள்ளிட்ட 30 நாடுகள் NATOவில் உறுப்பு நாடுகளாக உள்ளது.
இதில் உக்ரைனை சேர்க்க வேண்டும் அல்லது சேர்க்கக் கூடாது என்பதற்காகத்தான், தற்போது ரஷ்யா அந்நாட்டின் மீது போர் செய்து வருகிறது.