உயிருக்கே ஆபத்தாக மாறும் உடற்பயிற்சி! மக்களே உஷார்

122
Advertisement

அண்மை காலங்களில் உடற்பயிற்சி செய்தவுடன் மாரடைப்பு ஏற்படும் பல செய்திகளை பார்க்க முடிகிறது.

ஆனால், ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய உடற்பயிற்சியே ஆபத்தாக மாறுவதன் காரணத்தை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

சித்தாந்த் சூர்யவன்ஷி மற்றும் ராஜு ஸ்ரீவட்சவா போன்ற பிரபலங்களுக்கு கூட உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், 50 வயதுக்கு குறைவான பலருக்கும் இது போன்ற மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகின்றன.

உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சு வலி, இடது பக்க தோள்பட்டை வலி, தொண்டை வலி அல்லது முதுகு வலி ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக உடற்பயிற்சி செய்வதை நிறுத்த வேண்டும்.

குடும்பத்தில் ஏற்கனவே சக்கரை நோய், அதிக இரத்த அழுத்தம், புகை பிடிக்கும் பழக்கம், மரபணு வழியில் குடும்பத்தில் இதய நோய் இருப்பவர்கள் அதிக கடினமான உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும், சிறுவயதில் இருந்து உடற்பயிற்சி செய்யாதவர்கள் திடீரென தொடர்ச்சியான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது சிறிய அசௌகரியங்களில் தொடங்கி மாரடைப்பு வரை ஏற்பட வாய்ப்புள்ளதாக இதய நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

ஜிம்மில் உடற்பயிற்சி திட்டங்களில் இணைவதற்கு முன்னதாக இதயத்தை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மேலும் ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக 45 நிமிடங்கள் மட்டும் செய்தால் போதுமானது என கூறும் மருத்துவர்கள் மீதியான நேரத்தில் வாக்கிங், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற செயல்பாடுகளை செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்வது சிறப்பான பலன்களை தரும் என பரிந்துரைக்கின்றனர்.