நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய திடீர் போராட்டம்

289

சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததற்காக பாஜக-வில் இருந்து நீக்கப்பட்ட, நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜூம்மா மசூதி அருகே, ஆயிரக்கணக்கானோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்த போராட்டத்திற்கும் தங்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று டெல்லி இமாம் அறிவித்த போதிலும், மசூதியின் முன் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாராஜ் பகுதியில் வானகங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

கூடுதல் டிஜிபி-யின் வாகனம் கல்வீச்சில் சேதமடைந்தன.

பிரக்யாராஜ், லக்னோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சென்றவர்கல் தடுத்து நிறுத்தப்பட்டதால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன.

மேற்குவங்காளத்தில் ஹவுரா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன.

ஜார்க்கண்டின் தலைநகர் ராஞ்சியில், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பை பகுதியில், பெண்கள் பேரணியாக சென்று எதிர்ப்பு தெரிவி்த்தனர்.

சோலாப்பூரில், ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்று முழக்கங்களை எழுப்பினர்.

தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில்  உள்ள மசூதி அருகே ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியிலும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.