“பிரதமர் முதலில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்”

118

பிரதமர் மோடி முதலில் நாட்டு மக்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.

பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் இந்தியா மன்னிப்பு கோரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் இந்தியாவிற்கே இது அவமானம் என கடுமையாக சாடியுள்ளனர்.

Advertisement

தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி. ராமாராவ், பாஜகவினரின் வெறுப்பு பேச்சுக்களுக்காக ஒரு நாடாக ஏன் சர்வதேச சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜகதான் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதலில் பாஜக நிர்வாகிகள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன்கரே,  கூறுகையில், நமது நாட்டின் ராஜதர்மத்தை குவைத்தும் கத்தாரும் நினைவுபடுத்த வேண்டியதிருக்கிறது என்றும் பிரதமரால் இதைவிட நாட்டிற்கு வேறு அவமானம் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர்தான் முதலில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.