விமானத்தில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்க கூடாது – சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

21

விமானத்தில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்க கூடாது என விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஒரு நபர் மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் அவர்களை விமானத்தில் ஏற அனுமதி மறுக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணியின் உடல்நிலை குறித்து விமான நிறுவனங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அந்த பயணியின் மருத்துவ பரிசோதனையை கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் பரிசோதனை முடிவுகளுக்கு பிறகு குறிப்பிட்ட பயணியை ஏற்றிச் செல்வது குறித்து விமான நிறுவனம் முடிவு எடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகும் பயணியை விமானத்தில் ஏற்றிச் செல்ல மறுக்கும் பட்சத்தில், அதற்கான காரணங்களை உடனடியாக பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.