தீபாவளி அன்று காத்து இருக்கும் ஆபத்து அச்சத்தில் மக்கள்

273

வங்கக்கடலில் இன்று வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தீபாவளியன்று புயலாக வலுபெறக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடதிசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் வருகின்ற 24ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியன்று வங்கக்கடலில் புயல் வலுபெறக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், இந்த புயல் 25ஆம் தேதியில் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.