தற்பொழுதுள்ள காலகட்டத்தில் அனைவர்க்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது நரைமுடி தான் ,இந்த நரைமுடி பிரச்சனை சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்பட்டாலும் ,நம்முடைய தலைமுடியை சரிவர பராமரிக்காததும் ஒரு காரணாமாக அமைகிறது.
இப்படி முடி நரைப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக ஊட்டச்சத்து குறைபாடும் பார்க்கப்படுகிறது ,இதை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் நீரை கொதிக்க வைத்து, தேயிலை இலைகளை சேர்த்து பிளாக் டீ தயாரித்த பின் அதை ஆறவிட்டு முடிக்கு தேய்து குளிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது,இல்லையெனில் வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றை தலையில் நன்றாக தேய்த்து முப்பது நிமிடங்களுக்குப் பிறகு கழுவ வேண்டும் என கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் இரண்டு தே.கரண்டி தேங்காய் எண்ணெயில்எலுமிச்சை சாற்றை கலந்து தலைமுடியில் நன்றாக தடவி முப்பது நிமிடங்கள் ஊற விடவும் என சொல்லப்படுகிறது இப்படி செய்தால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம் என்று சொல்லப்படும் நிலையில் இவை அனைத்தையும் பயன்படுத்தும் முன்னர் மருத்துவர் ஆலோசனை பெறவேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.