திருடிய இளைஞரை லாரியின் முன்பக்கத்தில் கட்டிவைத்து ஓட்டிச்சென்ற கொடூரம்

323

ஒடிசாவில் பாராதீப் பகுதியில் சரக்கு லாரி ஓட்டுநரின் செல்போனை திருடியதாக கூறி, ஒரு இளைஞரை அந்த லாரியின் உரிமையாளரும், அவர் உதவியாளரும் கட்டி வைத்து  சரமாரியாக தாக்கி உள்ளனர்.

மேலும், கொடூரமான முறையில் அவரை லாரியின் முன்பக்கத்தில் கட்டி வைத்து நீண்ட தூரம் ஓட்டிச்சென்றனர்.

இந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் தாக்கப்பட்ட நபரின் பெயர் கஜேந்திரா என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் லாரி ஓட்டுநரையும், உதவியாளரையும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.