அடடே! பழைய சோறு சாப்பிட்டா இவ்ளோ நல்லதா!

181
Advertisement

தமிழர்கள் காலந்தொட்டு காலை உணவாக உட்கொண்டு வரும் பழைய சோற்றில் புதைந்துள்ள முத்தான மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொண்டால், நம் முன்னோர்களின் ஆரோக்கியமான உடல் கட்டிற்கான காரணம் புரியும்.

வேகமான வாழ்க்கை சூழலால் பலருக்கும் பழைய சோறு சாப்பிடும் வாய்ப்பு அமைவதில்லை என்றாலும், கிராமப்புற பகுதிகளில் பழைய சோறு சாப்பிடும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

இரவு முழுதும் நீரில் ஊற வைக்கப்படும் சோற்றில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்கி, B complex, vitamin K, calcium, iron, magnesium, potassium மற்றும் selenium போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கின்றன.

பழைய சோற்றில் உடலுக்கு நன்மை தரும் Lacto Bacililus  பாக்டீரியாக்கள் இருப்பதால், செரிமான கோளாறுகள் சீராகி பொதுவான வயிற்று பிரச்சினைகள், அல்சர் போன்ற உடல் உபாதைகளிடம் இருந்து நிவாரணம் கிடைப்பது சாத்தியமாகிறது.

மேலும், பழைய சோறு உட்கொள்வதால், உடலிலுள்ள electrolyteகள் சரியான அளவில் இருப்பதோடு நீரிழப்பு, உடல் சோர்வு உண்டாவதை தடுக்கிறது.

உயர் ரத்த கொதிப்பை குறைக்கும் பழையசோறு, பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் உறுதி செய்கிறது. இத்தனை பயன்களை கொண்ட பழையசோற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.