கோடையை சமாளிக்க மட்டுமில்லை..கோடி நன்மைகளை பெற தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிங்க……

115
Advertisement

கோடைக் காலத்தில் அதீத  வெப்பத்தை சமாளித்து உடல் உஷ்ணத்தை குறைப்பதில் மோர் பெரிதும் உதவும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், உடலுக்கு குளிரிச்சி அளிப்பது மட்டுமில்லாமல் மோர் எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. மோரில் Riboflavin என அழைக்கப்படும் விட்டமின் B உள்ளது.

இந்த விட்டமின் அதிகப்படியான உடற்சோர்வை உடனடியாக சரி செய்து ஆற்றலை வழங்கக்கூடியது. Riboflavin உடலில் உள்ள அமினோ அமிலங்களை கட்டுப்படுத்தி உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. மோர் அருந்துவதால் செரிமான அமைப்பு சீராவதோடு இதயம், சிறுநீரகம் மற்றும் கண் ஆரோக்கியம் மேம்படுகிறது. விட்டமின், தாதுச்சத்துக்கள் மற்றும் ப்ரோபயாடிக்ஸ் நிறைந்த மோர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மோர் உட்கொள்வதால் கெட்ட கொழுப்பு கணிசமாக குறையும் என்பதால் கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் மோரை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் அதிகம் உள்ள மோர் பருகுவதால் எலும்புகள் வலுவடைவதோடு பற்களின் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

மோர் குடிப்பதால் உடலின் இரத்த ஓட்டமும் மேம்படும் என்பதால் மோர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்வது ஆரோக்கியத்தில் சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்தும் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.