மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து

51
Advertisement

நாளுக்குநாள் நாகரீக முன்னேற்றத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மனிதர்களின் வேலைப்பளு பெருமளவு குறைந்து விட்டாலும் கூட, பரபரப்பான மற்றும் எந்திரத்தனமான வாழ்க்கையினால் மன அழுத்தம் வெகுவாக அதிகரிப்பது வாடிக்கையாகி விட்டது.

மன அழுத்தத்தை குறைக்க பல நடைமுறை வழிகள் இருந்தாலும், அதையும் பின்பற்ற நேரம் இன்றி, உடனடியாக கவலையை போக்க ஒரு மருந்து கிடைக்காதா என ஏங்கியவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.

இங்கிலாந்தை சேர்ந்த ரீடிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், B6 என்ற விட்டமின் எடுத்து கொள்பவர்களுக்கு, அந்த குறிப்பிட்ட விட்டமினை எடுத்து கொள்ளாதவர்களை விட மன அழுத்தம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

Advertisement

ஆரம்பகட்டத்தில் இருக்கும் இந்த ஆராய்ச்சி முடிந்து, பிரத்யேகமான மருந்து கிடைக்க இன்னும் சில காலம் எடுக்கும் என கூறும் ஆராய்ச்சியாளர்கள், அதே நேரத்தில் மக்கள் விட்டமின் B6 இருக்கும் மீன், பச்சை காய்கறிகள், கொண்டைக்கடலை போன்ற உணவுகளை சாப்பிடுவது மேம்பட்ட மன ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.