பொதுமக்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பழைய திட்டங்களையே சில நேரம் விரிவாக்கம் செய்து பொதுமக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது .
அதில் பெரும்பாலான திட்டங்கள் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.
தற்போது மார்ச் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் சிறப்பு வாரம் அனுசரிக்கப்பட உள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ், ‘ஒரு ஓய்வூதியத்தை தானம் செய்யுங்கள்’ என்ற பிரசாரத்தை முறைசாரா பிரிவில் உள்ள தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், தனக்கு உதவியாளராக உள்ள வீட்டு பணியாட்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் போன்றவர்களுக்காக ஓய்வூதியம் பெறுவதற்கான ப்ரீமியம் தொகையை தானமாக வழங்கலாம் என்பது இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பு.
பிரதமரின் ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்ற இலக்கை அடையும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
தனது தோட்டத்தில் பணியாற்றும் ஒருவருக்கு, ஓய்வூதியத்திற்கான ப்ரீமியத் தொகையை நன்கொடையாக வழங்கி,இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.