இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள, மெகந்தி இடுவதையும், டாட்டூஸ் (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நவீன நாகரிகமாக கருதுகிறார்கள்.பச்சை குத்துதல் என்பது 5000 ஆண்டுகளுக்கு முன், ஒரு இனத்தின் ஒரு பிரிவினரை தனியே பிரித்துக் கண்டறியும் ஒரு அடையாளமாக பயன்படுத்தினர்.
தாத்தாப் பாட்டிக் காலங்களில்,பெண்கள் கணவர் பெயரை சொல்லமாட்டார்கள். அதற்கு பதிலாக கைகளில் கணவர் பெயரை பச்சைக் குத்தி வைத்துக் கொள்வார்கள். யாராவது கணவர் பெயரைக் கேட்டால் அதை காட்டுவார்கள் பச்சைக் குத்துவது என்பது சர்வ சாதாரணம். அது அப்படியே நாகரிகம் கருதி கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது.
ஆனால், இன்று மேற்கத்திய கலாசாரம் என்ற பெயரில் இளைஞர்களும், இளைஞிகளும் கை, கால் ஆரம்பித்து உடம்பில் சகல இடங்களிலும் டாட்டூஸ் வரைந்துகொள்கின்றனர்.காலப்போக்கில் கலர்கலராக சாயங்களை கொண்டு டாட்டூஸ் போட்டுக்கொள்ள தொடங்கினார்கள்.
இதே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது.இந்நிலையில் மாடலிங் துறையில் பிரபலமாக உள்ள அம்பர் லூக் என்ற பெண் டாட்டூஸ் மோகத்தால் தன் கண் பார்வை இழந்து,நீல நிறத்தில் கண்ணீர் சிந்தியதை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தன் உடம்பில் 98 சதவீதம் டாட்டூஸ்களால் நிறைந்த அந்த பெண் கூறுகையில்,தனது கண் இமைகளில் நீல நிற மை பூசப்பட்டபோது என்ன நடந்தது என்று பகிர்ந்துள்ளார்,மேலும் உண்மை, இது மிகவும் மோசமானது.நான் மூன்று வாரங்கள் பார்வையிழந்து இந்து வருடங்கள் ஆகிவிட்டன எனவும் .அப்போது அவரின் கண்ணீர் நீலநிறத்தில் வெளியானதை புகைப்படத்துடன், அது மிகவும் கொடூரமானது.” என பகிர்ந்துள்ளார்.