இந்தியா-வங்கதேசம் இடையே 3வது ரயில் சேவை தொடக்கம்

366

“மிதாலி எக்ஸ்பிரஸ்” என்று அழைக்கப்படும் ரயில், மேற்குவங்கம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து, வங்கதேசத்தில் உள்ள டாக்காவுக்கு இன்று தனது முதல் பயணத்தை தொடங்கியது.

இதனை புதுடெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து இருநாட்டு ரயில்வே அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்தியா-வங்கதேசம் இடையே இது 3வது ரயில் சேவை ஆகும்.

இந்த ரயில் நியூ ஜல்பைகுரி மற்றும் டாக்கா இடையே உள்ள 513 கிலோமீட்டர் தூரத்தை 9 மணி நேரத்தில் கடக்கும்.

நான்கு குளிரூட்டப்பட்ட கேபின் கோச்சுகள் மற்றும் நான்கு குளிரூட்டப்பட்ட நாற்காலி இருக்கையுடன் இந்த ரயில் சேவை தொடங்குகிறது.