வர்த்தக உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மார்ச் 1ஆம் தேதி முதல் ரூ.105 உயர்த்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ம் தேதி தாக்குதல் தொடங்கியது.
போர் நிலவி வரும் சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் ஒரு பீப்பாய் 100 டாலர்களை தாண்டியது.
இது உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தை ஏற்பாடுத்தியுள்ளது.
டெல்லியில் வர்த்தக உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.105 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வால், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் மார்ச் 1 முதல் ரூ.2,012க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் வர்த்தக உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50 ஆக விற்கப்பட உள்ளது.
எனினும் தமிழகத்தில் இன்னும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் உயர்த்தப்படவில்லை.
சிலிண்டர் ஒன்றின் விலை மாற்றமின்றி ரூ.915.50க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வர்த்தக உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மேலும் சுமையை ஏற்றியுள்ளது.