கடந்த 2020 மார்ச் 23 அன்று முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே பிரத்யேக போக்குவரத்து செயல்பட்டது. ஆனால் தற்போது அனைத்து சர்வதேச போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 8-ம் தேதி இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.அதேபோல விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளது. விமான பணியாளர்கள் பிபிஇ கிட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவசர கால தேவைக்காக 3 இருக்கைகளை நிரப்பக்கூடாது எனும் விதிமுறையையும் தளர்த்தி இருக்கிறது. ஆனால் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகள் அவசியம் பயன்படுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்து செயல்படும் என நவம்பர் 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒமைக்ரான் தொற்று காரணமாக அந்த அறிவிப்பு மாற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் செயல்பட இருக்கிறது.
ஒவ்வொரு விமான நிறுவனங்களும் இதற்கான தயாரிப்புகளில் உள்ளன. எமிரேட்ஸ் நிறுவனம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பட இருக்கிறது.