தாலிபான்களின் பிடியில் பத்திரிகையாளரின் பரிதாபநிலை

268
Advertisement

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து பல பொருளாதார மற்றும் அரசியல் குழப்பங்களை எதிர்கொண்டுள்ளது.எந்தஅளவு என்றால் நாட்டில் திறமையான வல்லுநர்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த வரிசையில், அந்நாட்டு மூத்த பத்திரிகையாளர் பிழைப்பிற்காக வீதியில் தின்பண்டம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மூசா முகமதி என்பவர் பல ஆண்டுகளாக பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராகவும் நிருபராகவும் பணியாற்றினார்,ஆனால் தற்போது அவரது குடும்பத்திற்கு உணவளிக்க வருமானம் இல்லை.ஆதலால் பணம் சம்பாதிக்க தெரு உணவுகளை விற்கிறார்.இதை முன்னாள் ஹமீத் கர்சாய் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றிய கபீர் ஹக்மல், தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதையடுத்து முகமதியின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து,அந்நாடு மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் பல ஊடகவியலாளர்கள், குறிப்பாகப் பெண்கள் வேலையிழந்துள்ள நிலையில், ஊடகங்கள் மீதும் அவர்கள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில் தனிநபர் வருமானம் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளதால், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்திற்கான கண்ணோட்டம் மோசமாக உள்ளது என்று உலக வங்கி சமீபத்தில் கூறியது. “உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று மிகவும் ஏழ்மையாகிவிட்டது,” என்று உலக வங்கியின் ஆப்கானிஸ்தானுக்கான மூத்த பொருளாதார நிபுணர் டோபியாஸ் ஹக் கூறியுள்ளார்.