ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்பது அவசியமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

313

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்பது அவசியமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்து தரப்பினரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி வரும் நிலையில், கருத்து கேட்பு என்ற பெயரில், தி.மு.க அரசு கேலிக்கூத்து நடத்தி வருவதாக அவர் விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் தி.மு.க அரசு முடக்கி வருவதாக குற்றம் சாட்டினார்.