மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது சாத்தியமா?ஆய்வு கூறுவது என்ன?

347
Advertisement

மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது சாத்தியமா என்னும் கேள்விக்கு பதில் சாத்தியமே என்பதை கடந்த நூற்றாண்டு தகவல்கள் சொல்லும். 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, 40-லிருந்து 50 ஆண்டுகளாக இருந்த மனிதனின்  சராசரி ஆயுட்காலம் (lifespan) வருடாவருடம் மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது 75ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ஜப்பானில் சராசரி ஆயுட்காலம் 84 ஆகவும் இந்தியாவில் 69 ஆகவும் உள்ளது. போர், பஞ்சம்போன்ற காலகட்டத்தை தவிர்த்து பார்த்தால், நோய்க் கிருமி  தொற்றுகளை இந்தக் கால மருத்துவம் கட்டுப்படுத்தியதே இந்த ஆயுட்காலம் நீடிப்பிற்கு காரணமாகும்.அதேசமயம் வாழ்க்கைமுறை சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்து வருவதால், பலர் நீண்ட ஆயுட்காலத்தை இழக்கிறார்கள். புற்று நோய், நரம்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் குறிக்கோளாக இருக்கிறது .

இந்த குறிக்கோளை நாளைய மருத்துவம் என்று அழைக்கப்படும் துல்லிய மருத்துவம் அதாவது , தொடக்கப்புள்ளி நிலையிலேயே இந்த நோய்தான் என உறுதிசெய்யும் வழிமுறைகள் வகுத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய மருத்துவம் இதை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.