உயிரை கொல்லும் பக்கெட் ஹீட்டர்கள்! உஷாரா யூஸ் பண்ணுங்க

127
Advertisement

இந்த வருடத்தில், இதுவரை நாடு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட பக்கெட் ஹீட்டர் விபத்துகளால் ஏற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளன.

கீசர் வசதி இல்லாத மக்கள் மற்றும் ஹாஸ்டலில் தங்கி இருப்பவர்கள் போன்ற பலரும் உடனடியாக தண்ணீர் சூடு செய்ய பக்கெட் ஹீட்டர்களையே நம்பியுள்ளனர். ஆனால், எளிதாக எடுத்து செல்ல கூடிய இந்த சாதனத்தால் பயன்களை விட ஆபத்து அதிகம் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

இந்திய தரக்கட்டுப்பாட்டு விதிப்படி செய்யப்பட்ட ஒரு பக்கெட் ஹீட்டர் பயன்படுத்தும் போது, அதிலிருக்கும் தண்ணீரை தொட்டாலும் ஷாக் அடிக்கக்கூடாது.

Advertisement

ஆனால், பெரும்பாலான விபத்துகள் ஹீட்டர் Onஇல் இருக்கும் போது, மக்கள்  தண்ணீரை தொடும் போது தான் நிகழ்கின்றன. ஆகவே, எந்த பாதுகாப்பு வாக்குறுதி கொடுக்கும் பக்கெட் ஹீட்டர் ஆனாலும், ஸ்விட்ச் off செய்து ஹீட்டரை வெளியே எடுக்காமல் அந்த தண்ணீரை தொடுவதை தவிர்ப்பது சிறந்தது. ஹீட்டரின் உலோக பகுதியை கட்டாயம் தொடவே கூடாது.  

நம் வீட்டில் உள்ள wiring மற்றும் earthing சரியாக இருப்பதை உறுதி செய்வது பொதுவான மின்சார விபத்துகள் நிகழ்வதை தடுக்கும்.

மின்சாரம் உடனே உடலுக்குள் பாய்வதை  தடுக்க எந்த மின்சாதனத்தை பயன்படுத்தினாலும் ரப்பர் செருப்பு அணிந்து கொள்வது கூடுதல் பாதுகாப்பாக அமையும்.

15 நிமிடங்களுக்கு மேல் பக்கெட் ஹீட்டர்களை தொடர்ந்து இயக்குவதால் உலோக அரிப்பு ஏற்பட்டு ஷாக் அடிக்கும் வாய்ப்புகள் அதிகமாகிறது. மேலும், ஒரே பக்கெட் ஹீட்டரை வருட கணக்கில் பயன்படுத்தாமல், செயல் திறன் வரம்பை பொறுத்து மாற்றிவிடுவது விபத்து நிகழும் வாய்ப்புகளை குறைக்க உதவும்.