கொரோனா பாதிப்பு இந்தியாவில் எப்படி உள்ளது..?

india-corona
Advertisement

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 32 ஆயிரத்து 937 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு மேலும் 417 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 31 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 909 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் நாடு முழுவதும் 3 லட்சத்து 81 ஆயிரத்து 947 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.