கால்களுக்கு பயிற்சி கொடுத்தால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம்..! எப்படி தெரியுமா..?

192
Advertisement

ஜிம்மில்  கால்களுக்கென்று  தனியாக  ஒருநாள்  பயிற்சி  கொடுக்கப்படும், ஆனால்  பலர்  கால்களுக்கு  பயிற்சி  அளிக்கும் நாள்  அன்று  ஜிம்முக்கு செல்ல மாட்டார்கள்,  ஏனென்றால்  கால்களுக்கு பயிற்சி எடுத்த  அடுத்த  நாள்  கடுமையான  வலி  ஏற்படும், இதற்கு பயந்தே  பலரும்  அன்று  மட்டும் ஜிம்மிற்கு செல்ல மாட்டார்கள்.

ஆனால்  நமது  கால்கள்  பலமாக  இருந்தால்  நமது  உடலுக்கு  மட்டுமல்ல, இதயத்திற்கும்  நல்லது  என்று  சொன்னால்  நம்பமுடிகிறதா? ஆம்  சமீபத்தில் வெளியான ஆய்வுகள்  இதை  உறுதிப்படுத்துகின்றன, கால்களை  பலப்படுத்தினால் மாரடைப்பு  வரும்  ஆபத்தைக்  குறைக்கலாம்.

இதயம்  பலவீனம்  அடைவதற்கு  முக்கிய  காரணமாக  இருப்பது  இதயத் தசை  செயல்  இழப்பு என்றே சொல்லலாம்,  இதையே  நாம்  மாரடைப்பு என்கிறோம். எனவே இது தொடர்பாக 2007 முதல் 2020  வரை  இதயத்  தசை செயலிழப்பால்  மருத்துவமணையில்  அணுமதிக்கப்பட்ட  நோயாளிகளிடம் ஆய்வு  செய்யப்பட்டது,  அப்போது அதில் சிலர் (குவாட்ரிசெப்ஸ்) பயிற்சியை முறையாக  செய்து கால்களை பலப் படுத்தினர், இவர்களூக்கு இதயம்  பலவீனம்  அடைய  வாய்ப்பு  குறைவாக  இருப்பது ஆய்வில்  தெரிய வந்தது,  எனவே இவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்திருந்த நிலையில், இதே  நபர்களை மருத்துவர்கள்  சில  வருடங்கள்  கழித்து  ஆய்வு  செய்தனர், அப்போது  கால்  நீட்டுத்  தசையில் (குவாட்ரிசெப்ஸ்) செய்து அதிக சக்தியை,  வலுவை  கொண்டவர்களுக்கு மற்றவர்களை  விட  இறப்பு  ஏற்படும்  வாய்ப்பு  41%  குறைவு  என  தெரிய வந்தது.  

மருத்துவ முறையில்  குவாட்ரிசெப்ஸ் பலத்தை  கச்சிதமாகவும் எளிமையாகவும்  கணக்கிட முடியும்.  ஓருவரின்  குவாட்ரிசெப்ஸ் பலத்தின் மூலம், அவருக்கு  மாரடைப்பு ஏற்படக்  கூடிய ஆபத்து எந்தளவிற்கு இருக்கிறது, என்பதை கண்டறிய முடியும்.  இதை  வைத்து  அந்த  நபருக்கு தேவையான அடுத்தகட்ட சிகிச்சையை அளிக்க முடியும். ஆகையால் கால் தசை  பலமிக்கதாக இருக்க  தொடர்ந்து  பயிற்சி  செய்யுங்கள் எனக் கூறுகிறார்  கிடாசதோ  மருத்துவ  அறிவியல்  பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இந்த ஆய்வின் தலைவருமான கென்சுகே உனோ.

இதயம் சம்மந்தமான நோய்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. உலகில் இதயம் சம்மந்தமான நோய் உள்ளவர்களில் 60% பேர் இந்தியாவில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.