4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

301

கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை பெய்து வரும் நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.